அஸ்வகந்தா இதைப் பற்றி விளம்பரத்தை நாம் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அப்படி உண்மையில் இந்த அஸ்வகந்தா என்ற பெயரில் விற்கப்படும் பவுடர் மூலம் நம் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் தருகிறது இது உண்மைதானா என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். கிட்டத்தட்ட இவை 15 ஆரோக்கியமான நன்மைகளை தருவதாக கூறப்படுகின்றது.
அப்படி இந்த அஸ்வகந்தா எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த அஸ்வகந்தாவை நாம் தினமும் தூரம் பயன்படுத்தினால் நம் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை அலசி ஆராய போகிறோம் முடிந்த வரையில் முழுமையாக படித்து இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
அஸ்வகந்தா என்றால் என்ன? what is Ashwagandha?
அஸ்வகந்தா என்பது ஒரு வகையான மூலிகை. இது நாட்டு மருத்துவத்திலும் நாட்டு மருத்துவ கடையிலும் கிடைக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க கூடியவை. பொதுவாகவே இவை கொழுப்பு சக்தியை குறைக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் கொண்டவை. அது மட்டுமல்லாமல் மேலும் நம் உடலுக்கு பல நன்மைகள் மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது.
அஸ்வகந்தா மருத்துவ பண்புகள் Ashwagandha Health benefits
அஸ்வகந்தா பவுடர் எடுத்துக் கொள்வது எந்த அளவிற்கு நம் உடலுக்கு நல்லதும் தீமையும் தருகிறது தெரிந்து கொண்டு அதை எடுத்துக் கொள்வது தான் சிறந்த வழியாகும். பொதுவாகவே அஸ்வகந்தா ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் கொழுப்புகளை நம் உடலில் அண்ட விடாமல் பாதுகாத்துக் கொள்ளும். அது மட்டுமல்லாமல் மேலும் சில இதயம் சம்பந்தமான நோய்களுக்கும் தடுப்பானாக பயன்படுகிறது.
அஸ்வகந்தாவை தொடர்ந்து எடுத்தும் பொழுது எடை இழப்பு மட்டுமல்லாமல் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு நன்றாக உறங்கவும் மன அழுத்தத்தை குறைத்து அந்த நாளை அவர்களுக்கு நல்ல நாளாக மாற்றவும் அஸ்வகந்தா பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் அஸ்வகந்தாவில் மன அழுத்தம் மற்றும் பதட்டம் இல்லாமல் படபடப்பாக உடல் நிலையை சரிசமமாக வைக்க பயன்படுகிறது.
Read More :பல்லி விழுந்தால் இது பண்ணுங்க 2024 palli vilum palan in tamil
ஆண்களுக்கு விந்தணுக்கள் சரிவு அதிகரித்து டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் விந்தணுக்களின் செறிவு நிலை, ஆண்களின் விந்தணு இயக்கத்தை சரிவர அதிகரிக்க செய்யவும் இவை பயன்படுகிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கு உதவியாக உள்ளதாக கூறப்படுகிறது ஆனாலும் இவை மருத்துவர்களின் ஆலோசின் படி எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.
அஸ்வகந்தா வீக்கத்தின் அளவை குறைத்து அலர்ஜி போன்றவற்றில் சிரமப்படுபவர்களுக்கு அலர்ஜி புரதங்களை குறைத்தும் தீங்கு விளைவிக்கும் செல்களை முற்றிலுமாக அளித்து உடலுக்கு நல்லதை தர உதவுகிறது.
மேலும் அஸ்வகந்தா நினைவாற்றலை கொடுமைப்படுத்தி மூலிகை சுறுசுறுப்பாகி மூளைகளுக்கு செல்லும் நரம்பு மற்றும் செல்களை ஊக்குவித்து எப்பொழுதும் புத்துணர்ச்சியாகவே நம்மை வைத்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக உள்ளது.
குறிப்பாக ஆண்கள் ஜிம்முக்கு செல்லும் பொழுது உடல் எடை மற்றும் தசைகளுக்கு வலுவூட்டும்மாக இந்த அஸ்வகந்தா பயன்படுகிறது. மேலும் தசை வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றன.
அஸ்வகந்தா எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
அஸ்வகந்தாவை தினந்தோறும் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. அப்படி குறைந்தபட்சம் அஸ்வகந்தா பவுடரை ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலில் கலந்து தினந்தோறும் குடிக்கலாம். அதிலும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வது தவிர்க்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் அஸ்வகந்தா உங்கள் உடலில் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் இதை எடுத்துக் கொள்வது அதிகப்படியான வெப்பத்தை உண்டாக்க கூடும். அதனால் முடிந்த வரையில் அஸ்வகந்தாவை காய்ச்சல் நேரங்களில் எடுப்பது தவறு.
அஸ்வகந்தா அதிகமாக எடுத்துக் கொண்டால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும்
பொதுவாக அஸ்வகந்தா அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. காரணம் உங்களுடைய உடலுக்கு மற்றும் வயிற்றுக்கும் மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் அஸ்வகந்தா அதிகமாக எடுத்துக் கொள்வது வயிற்று வலியை மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.அது மட்டுமல்லாமல் அஸ்வகந்தா நீண்ட காலம் எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மயக்க மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வதும் போது அஸ்வகந்தாவை எடுப்பது மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருக்க வேண்டும்.
குறிப்பு: அஸ்வகந்தாவை எடுப்பதற்கு உங்கள் உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை மருத்துவரிடம் கூறி அதற்குப் பிறகு அஸ்வகந்தாவை எடுப்பது நல்லது.
.