பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று கருப்பு கவுனி. பெயருக்கு ஏற்றார் போல கரு நிறத்தில் காணப்படுகின்ற ஒரு வகையான அரிசி கருப்பு கவுனி. இது பல பேருக்கு அரிசி என்றால் வெள்ளை கலரில் தான் இருக்கும் என்பது தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த மாதிரியான கருப்பு கலரில் அரிசியை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்., ஆனால் அவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த கருப்பு கவனி நம் உடலுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், இந்த காலகட்டத்தில் இதை அவ்வளவு நாம் சாப்பிட்டது கூட கிடையாது.
அப்படி என்னதான் இந்த கருப்பு கவனி சாப்பிடுவதால் நம் உடலுக்கு நல்லது ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். இது பொதுவாக சீனாவில் இருந்து வந்ததாகவும் அந்த காலத்தில் மன்னர்கள், ராஜாக்கள், மிகவும் பணக்கார நபர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய அரிசி யாகவும் இருந்ததாக. மேலும் இதை புழுங்கள் அரிசி, பாலில் இல்லாத அரிசி, என சில பெயர்களால் கூறப்படுகிறது.
கருப்பு கவனி அரிசி நன்மைகள்-karuppu kavuni Health Benefits in tamil
கருப்பு கவனி அரிசியில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் ஈ |
வைட்டமின் பி2 |
வைட்டமின் பி3 |
பீட்டா கரோட்டின் |
ஆன்ட்டி ஆக்டிவிட்டன்கள் |
கால்சியம் |
பாஸ்பரஸ் |
இரும்புச்சத்து |
மக்னீசியம் |
பொட்டாசியம் |
இப்படி பலதரப்பட்ட உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் முழுக்க முழுக்க இந்த க கருப்பு கவுனி (karuppu kavuni) அரிசியில் உள்ளது.
வீக்கத்தை போக்க: பொதுவாக இந்த அரிசியில் நம் உடலுக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும். பூச்சிக்கடி, தோல் அலர்ஜியால் ஏற்படக்கூடிய வீக்கம், நமைச்சல் போன்றவற்றிற்கு கருப்பு கவனி அரிசியில் உள்ள பைட்டோநியூட்ரியான் பண்பு அதிகமாக இருப்பதால் அலர்ஜியை குறைப்பானாக பயன்படுகிறது.
மூச்சு குழாய் பிரச்சனை: கருப்பு கவுனி அரிசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மூச்சு குழாய் பிரச்சனை சரி செய்து ஆஸ்துமாவுக்கும் விடுபட இந்த கருப்பு கவுனி அரிசி பயன்படுகிறது. மேலும் மருத்துவர்கள் ஆலோசின் படி எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.
கண் ஆரோக்கியம் : இதில் வைட்டமின் ஈ இருப்பதால் ஆக்சிஜனேற்றங்களில் உங்கள் கண்களை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளவும். வயதாகும் பொழுது கண்களில் ஏற்படும் குறை, கண் பார்வை குறைதல் போன்றவற்றிற்கும் நிவாரணியாக கருப்பு கவனி அரிசி உள்ளது.
Read More :mullangi Health benefits in tamil முள்ளங்கியின் நன்மைகள் என்ன?
உடல் இளைப்பு: அதே போல் இந்த வகை அரிசியில் குறைந்த கிளைமேசிக் இன்டெக்ஸ் இருப்பதால் மிகச் சிறந்த உணவுப் பொருளாகவும். குறைந்த அளவு கலோரிகள் உள்ளதால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் கொலஸ்ட்ரால் இல்லாத இந்த அரிசியை பயன்படுத்தலாம்.
நினைவாற்றல்: மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் மற்றும் ரத்தப் பைகளை சுறுசுறுப்பாக்கி. நினைவாற்றல் ஞாபகம் மறதிஆகியவற்றை தடுத்து வயது மூப்பின் காரணமாக இறந்த செல்களை மூளையில் இருந்து அகற்றி புது செல்களை உற்பத்தி செய்து நினைவாற்றலையும் மூளையை சுறுசுறுப்பாகவும் வைக்க கருப்பு கவுனி அரிசி பயன்படுகிறது.
சர்க்கரை அளவு: இந்த கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் ஒழுங்குபடுத்தவும் பயன்படுகிறது. மேலும் இது நீரழி நோயாளிகள் நிலையான ரத்த நிலை ஆற்றலை ஒழுங்கு படுத்தவும் பராமரிக்கவும் மருத்துவர்களின் ஆலோசனையின் படி இந்த அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.
கருப்பு கவுனி அரிசியின் மேலும் நன்மைகள்
- கல்லீரலில் உள்ள நச்சு தன்மையை சரி செய்ய பயன்படுகிறது.
- தசைப்பிடிப்புகளுக்கும் வீக்கத்திற்கும் சரி செய்வதற்கு பயன்படுகிறது.
- கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட அரிசி.
- குழந்தைகளுக்கு வளர்ச்சியை ஊக்குவித்து ஊட்டச்சத்துடன் இருக்கக்கூடிய பண்பு கொண்டது.
- இதய நோய் மற்றும் புற்று நோய் வராமல் தடுப்பதற்கும் சிறந்த அரிசி.
- 0 பர்சன்டேஜ் கொலஸ்ட்ரால் கொண்ட அரிசி.
- எந்தவிதமான நோயும் அவ்வளவு சீக்கிரமாக எளிதில் ஆண்ட விடாமல் தடுக்கும் அரிசி.
- தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி 50 சதவீதத்திற்கும் கீழாக உதிர்வை குறைத்து. நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
கருப்பு கவுனி அரிசியை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஏற்படும் தீமைகள்-karuppu kavuni rice side effects in tamil
கருப்பு கவுனி அரிசி அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமாக சில சைடு எபெக்ட்டுகள் நம் உடலுக்கு ஏற்படுத்தும்.
- பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கருப்பு கவுனி அரிசியை உட்கொள்வது சிறந்தது.
- நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் வயிறு சம்பந்தமான மலச்சிக்கல் காண வாய்ப்புகளும் அதிகம்.
- இரவு நேரங்களில் அதிகமாக இதை எடுத்துக் கொள்ளும் பொழுது ஜீரண கோளாறு ஏற்படலாம்.
கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி-karuppu kavuni kanji in Tamil
முதலில் கருப்பு கவனி அரிசி கஞ்சி என்பது அனைவரும் காலையும் உணவாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இவை குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்கள் எலும்பு வழுப்பெறும்.
தேவையான பொருட்கள்:
- கவுனி அரிசி அரை கப்
- ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது
- பூண்டு எட்டு பல்
- ஜீரா நசிகிது ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் ஒன்று
- கொத்தமல்லி இலைகள்
- சிறிதளவு மோர்
- தேவையான உப்பு
எப்படி செய்வது:
அரிசியை கழுவி இரவு முழுவதும் ஊறவைத்து பிறகு மறுநாள் மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தை எடுத்து அதில் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு வதக்கி எடுத்து பின்பு அரிசி அரைக்கப்பட்டு இருப்பதை இதனுடன் சேர்த்து நன்கு கேலரி கொண்டு இருக்க வேண்டும்.
பிறகு குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் அரிசி வெந்தவுடன் வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து கஞ்சி போல் குடிக்கலாம்.