ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் காலண்டர் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் அதேபோல் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கடந்த வாரத்தில் தேர்வுகள் தொடங்கியது.அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு காலாண்டு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை
இதுக்கு முன்பு பள்ளி மொத்த வேலை நாட்கள் 210 ஆக இருந்தது. அதை தமிழக அரசாங்கம் கல்வித்துறை அதை 220 ஆக மாற்றி கடந்த வாரத்தில் சுற்றி அறிக்கையை அறிவித்திருந்தது. மேலும் இதை ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த மூலமாக மீண்டும் 210 ஆக கொண்டு வந்து . இந்த வருடத்திற்கான காலண்டரை வெளியிட்டது.
ஆனால் இதற்கு முன்பு கடந்த ஆண்டுகளில் 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ஐந்து நாட்கள்தான் அதில் சனி ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி ஆகியவை நீக்கினால் வெறும் இரண்டு நாட்கள் மட்டும் தான் காலாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் முறியீட்டும்படி மேலும் இரண்டு நாட்கள் வரை அதாவது அக்டோபர் 3 அல்லது நான்காம் தேதிகளில் விடுமுறை விடுக்கப்பட்டு அக்டோபர் ஐந்து அல்லது ஆறாம் தேதி பள்ளி திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.