நமது வீடுகளில் அதிகமாக பல்லி சுவற்றில் இருப்பதை பார்க்க முடியும். சில நேரங்களில் நாம் ஏதேனும் நல்ல விஷயங்கள் பேசும் பொழுது பல்லி சத்தம் விட்டால் அந்த விஷயம் உண்மையாகவோ அல்லது நல்ல விஷயம் நடப்பதற்கான அறிகுறிகள் ஆகவோ இருக்கும் எனவும் சாஸ்திரங்களால் கூறப்படுகிறது.
அப்படி பல்லி விழும் இடங்களை வைத்து ஜோதிட சாஸ்திரங்கள் மூலம் நம் வாழ்க்கைக்கும் பல்லிக்கும் தொடர்பு இருப்பதால் எந்த இடத்தில் விழுந்தால் நல்லது ஏற்படும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நம் உடலில் ஒவ்வொரு இடத்திற்கும் பல்லி விழுந்தால் சில பரிகாரங்களும் , அசம்பாவிதங்களும் , நல்லது போன்றவை எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் எந்த இடத்தில் விழுகிறது அதை பொறுத்து தான் உங்களுக்கு நன்மையோ அல்லது தீமையோ ஏற்படும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பல்லி கடவுள்-பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
பல்லிக்கும் வேறு பெயர்களாகவும் அழைக்கப்படுவது உண்டு. எத்தனை பேருக்கு தெரியும் கௌளி என்று சாத்திரம் உள்ளது. இது காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவம் கொண்ட படங்கள் இடம்பெற்று இருக்கும். அது மட்டுமல்லாமல் பல்லி கடவுளாக ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் வணங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்லி விழுந்தால் வணங்கக்கூடிய கடவுள்கள்
பல்லி விழுவது என்பது சாதாரணமாக ஒரு விஷயம் என்று நாம் எண்ணக்கூடாது. பல்லி விழுந்த உடனே முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பதற்றப்படாமல் குளியலறைக்கு சென்று நன்கு குளிக்க வேண்டும். பிறகு முதல் கடவுளாக இருக்கும் விநாயகர் மற்றும் விஷ்ணு கொண்ட கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் அவசியம்.
ஒருவேளை கோவிலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் வீட்டின் பூஜை அறையில் சிவன் மற்றும் விநாயகரை நினைத்து வழிபட வேண்டும்.
தலை மற்றும் முகத்தில் பல்லி விழுந்தால்
கெட்ட சகுனத்தை உண்டாக்கக்கூடிய இடமாக தலையில் பல்லி விழுவது. நெருக்கமான உறவினர்கள் இறப்பது, கெட்ட சகுனங்கள் ஏற்படுவது போன்றவை தலையில் விழும்போது நிகழலாம்.
அதுவே நெற்றியில் விழும் பொழுது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது குறிப்பாக வலது நெட்டில் விழுந்தால் லட்சுமி கடாட்சம் உருவாகும் எனப்படும் இடது நெற்றியில் விழுந்தால் கீர்த்தி உண்டாகும் என்பதும் அர்த்தம்.
அதேபோல் முகத்தில் பல்லி விழுந்தால் அவர்கள் வீட்டிற்கு உறவினர்கள் வரக்கூடும் என்பதும் அர்த்தம்.
இடது கால் மட்டும் இடது கையில் பல்லி விழுந்தால்
நமது உடலில் பல்லி எங்கு வேண்டுமானாலும் விழலாம் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு பண்புகள் உண்டு. அந்த வகையில் நம்மளுடைய இடது கால் மற்றும் இடது கையில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக உணவீர்கள். அன்றைய தினம் நடக்கக்கூடிய எல்லா விஷயங்களும் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
வலது கை மற்றும் வலது காலில் பல்லி விழுந்தால்
நமது உடலில் பல்லி வலது கை மற்றும் வலது காலில் விழும் பட்சத்தில் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம் அல்லது உடல்நிலையில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் அதிகம்.
கால் பாதத்தில் விழுந்தால்
ஏதேனும் ஒரு நேரத்தில் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதோ உங்களுடைய கால் பாதத்தில் விழும் பட்சத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக அர்த்தம்.
வயிற்று மேல் விழுந்தால்
குறிப்பாக வயிற்று தொப்புள் மேல் விழுந்தால் தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் போன்ற மிக மிக விளைமிக்க பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அர்த்தம்.
மனிதத் தொடையின் மீது விழுந்தால்
பொதுவாக பல்லி நம் தொடை மீது விழுந்தால் நம்மளுடைய பெற்றோர்களுக்கு மனக்கசப்பாக, சோகத்தை ஏற்படுத்தும் ஏதேனும் நிகழ்வு நடக்கும் என்பது அர்த்தம்.
மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் விழுந்தால்
மார்பு வலது பகுதியில் விழுந்தால் லாபம் கிடைக்கும் என என்பதும் அதுவே இடது பக்கத்தில் விழுந்தால் அந்த நபருக்கு சுகம் கிடைக்கும் என்பதும் அர்த்தம்.
அதே போல் இடது பக்க கழுத்தின் வீதிகளிலும் பட்சத்தில் நீங்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்கும் அதே போல் வலது கழுத்து பக்கத்தில் விழும் பொழுது மற்றவர்களுடன் பகை ஏற்படும் என்பதும் அர்த்தம்.