பொதுவாக ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது குழந்தை பிறந்து 16ஆம் நல்ல நாளில் கோவிலிலோ அல்லது வீட்டில் எல்லோரும் பெரியவர்கள் வைத்து வைக்கக்கூடிய அந்த குழந்தைக்கு முதற்கட்ட உரிமையாக கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது அதை ஜாதகத்தை அடிப்படையில் பெயர் வைக்க வேண்டுமா அல்லது எண் கணிதத்தை அடிப்படையாக பெயர் வைக்க வேண்டுமா என்ற விளக்கத்தைப் பற்றி இதில் பார்க்கலாம். பொதுவாக அது ஆணோ அல்லது பெண்ணோ அவர்களுக்கு வைக்கக்கூடிய பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்த காலத்தில் பெரியவர்கள் பெயர் விளங்குமாறு இருக்க வேண்டும் என கூறுவது வழக்கம். இதற்கு காரணம் பெயர் விளங்கும் என்பதற்கு காரணம் அல்ல அந்த பெயர் வைக்கக்கூடிய மனிதன் அந்த அளவிற்கு குணத்திலும் சரி பாராட்டத்திலும் சரி நல்ல மனிதராக திகழ்வதுதான்.
அப்படிப்பட்ட மனிதர்களுக்கு அவர்கள் பெயர் காலாகாலத்திற்கும் நிலை திணிக்க கூடிய பெயர்கள். இதனால்தான் அந்த காலத்தில் இருந்து பெரியவர்கள் ஒரு பெயர் காலகாலத்தில் நிற்க வேண்டும் என்பதையும் நமக்கு சொல்லிக் கொடுத்துட்டு போயிட்டு இருக்கிறார்கள். சரி இப்பொழுது இதை ஜாதக அடிப்படையில் நாம் பெயர் வைக்கலாமா அல்லது நியூமரிக்கல் அடிப்படையில் பெயர் வைக்கலாமா என்பது மிகப் பெரிய குழப்பமாக இருக்கிறது.
ஒரு விதமான பாசிட்டிவ் எனர்ஜி
குறிப்பாக ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அந்த குழந்தையின் வருங்காலம் மற்றும் அந்த குழந்தைகளின் பெயரில் ஒரு விதமான பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருக்கக்கூடும். அந்தப் பெயரை மற்றவர்கள் உச்சரிக்கும் பொழுதும் அல்லது அந்தப் பெயர் கொண்ட நபர் அந்த பெயரை உச்சரிக்கும் போதும் ஒரு விதமான புத்துணர்ச்சியை மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்ட ஒரு ஆற்றலை உருவாக்கக்கூடிய ஒரு எவ்விதமான எனர்ஜியை உண்டாக்க கூடும்.
பொதுவாக பெயர் என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் தெய்வத்தினுடைய பெயர், குழந்தையை தெய்வத்தின் உடைய பெயர், அல்லது மூதாதையர்கள் உடைய பெயர்களை போன்றவை தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு பெயரை குழந்தைகளுக்கு சூட்டி அந்த பெயரை நாம் உச்சரிக்கும் பொழுது தெய்வத்தின் நாமத்தை போற்றி குழந்தையின் பெயரை அழைக்க வேண்டும்.
இதற்கு தான் அந்த காலத்தில் இருந்தே பெரியவர்கள் மூதாதையருடைய பெயர்களையோ அல்லது தெய்வத்தின் பெயர்களையோ தன் குழந்தைகளுக்கு வைத்து அவர்களையும் கடவுளாக போற்றி அவர்களுடைய பெயரை குறிப்பிடும் பொழுது ஒரு விதமான பாசிட்டிவ் எனர்ஜி உருவாக கூடும் எனவும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையாகும்.
மேலும் படிக்க:Girl baby names in tamil பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்
ஏன் கடவுளுடைய பெயரை குழந்தைகளுக்கு சூட்டுகிறோம்?
அந்த காலத்தில் பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது ஆண் குழந்தையாக இருந்தாலும் அல்லது பெண் குழந்தையாக குழந்தையாக இருந்தாலும் கடவுள் பெயரை வைத்து அழைக்கும் பொழுது ஒருமுறை இரண்டு முறை அல்ல தினமும் பல முறையாவது நம் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைப்போம். அந்த தருணத்தில் கடவுளுடைய நாமத்தை நாம் போற்றுகிறோம் அவருடைய பெயரை உச்சரித்து கூப்பிடுகிறோம் இதனால் நேரடியாக நாம் தினந்தோறும் கடவுளே அழைக்கிறோம் என்ற பக்தியை அதிகமாக தான் அந்த காலத்தில் கடவுளின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டினார்கள்.
ஜாதகத்தை வைத்து பெயர் வைப்பதா அல்லது என் கணிதத்தை வைத்து பெயர் வைப்பதால் குழப்பம் எல்லோருக்குமே ஏற்படும். பொதுவாக ஜாதகம் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் எண் கணிதம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தான் நம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மனிதன் அவருடைய ஆயுள் காலத்திலும் எப்பொழுது இறப்பான் எந்த மாதிரியான குணம் இருக்கும் என்ற அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய முடியும். இப்பொழுது எதை வைத்து அடிப்படையாக நாம் பெயர் வைக்க வேண்டும் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
சூரியன் |
சந்திரன் |
குரு |
ராகு |
புதன் |
சுக்கிரன் |
கேது |
சனி |
செவ்வாய் |
1முதல் 9 வரையிலான எண்கள் ஒவ்வொரு கிரகத்திற்கான எண்களாக கருதப்படுகிறது.1 சூரியன்,2 சந்திரன், 3 குரு ,4 ராகு, 5 புதன், 6 சுக்கிரன்,7 கேது,8 சனி,9 செவ்வாய் இந்த நவக்கிரகங்களையும் இந்த எண்ணிலே கிரகங்களை அனைத்தும் நவகிரகங்களில் உள்ளடக்கி ஒவ்வொரு எங்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலை உருவாக்கக்கூடும் என்ற வகையில் உதாரணமாக எண் ஒன்றில் பெயர் அமைந்தால் சூரியன் சம்பந்தப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்டவராக இருப்பார்கள் எனவும் கருதப்படுகிறது இருந்த போதிலும், ஜாதகத்தை அடிப்படையாக வைத்து அதில் வரக்கூடிய எழுத்துக்களை வைத்து அதற்குரிய எண்களில் உள்ள பெயர்களை சூட்டுவது தான் சிறந்த முறையாகும்.
இது பழைய நபர்கள் ஏன் நமக்கு மட்டும் பழைய பெயராக வைத்திருக்கிறார்கள் மற்றவர்களுக்கு மாடர்ன் வைத்திருக்கிறார்கள் என ஏங்கக்கூடிய நபர்களும் உண்டு. தயவு செய்து அப்படி நீங்கள் நினைக்க கூடாது ஏனென்றால் ஒரு பெயர் என்பது இறைவனால் நமக்கு தரப்பட்ட ஒரு விதமான பிரசாதம். அதை நாம் மகிழ்ச்சியோடு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் அது தவிர அசிங்கமாக நினைக்கக் கூடாது.
சிலருக்கு பெயரை மாற்றி அழைத்தாலோ அல்லது பெயரை மாற்றி வைத்தாலோ அவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் இதை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கு காரணம் முழுக்க முழுக்க பெயரை மாற்றியதன் காரணமாகவே நடக்கும். அதனால் முடிந்த வரையில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது ஜாதகம் மற்றும் எண் கணிதப்படி இரண்டுமே பார்த்து வைப்பது அவசியம்.