தேனீர் என்பது தினந்தோறும் சிலருக்கு சாப்பாட்டை விட டீ தான் முக்கியம். அந்த அளவிற்கு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. டீக்கடைகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இங்கு தேநீர் என்பது தேயிலை கொண்ட டீ மட்டுமல்லாமல், பிளாக் டீ,, கிரீன் டீ, மசாலா டீ, இஞ்சி tea, புதினா டீ இப்படி பல வகையான டீகள் விற்கப்படுகின்றன. அந்த வகையில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கிரீன் டீ.
இது தினந்தோறும் ஒரு கப் அளவு எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகளும் , இதனால் நம் உடல் எடையும் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
கிரீன் டீயின் நன்மைகள் Green Tea
நம் நண்பர்கள் கூட்டத்தில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு நபர் மற்றவர்கள் அனைவரும் டீ குடிக்கும் பொழுது சற்று டிஃபரண்டாக கிரீன் டீ குடிப்பார். முடிந்து வரையில் அவருக்கு இந்த செய்தியை அவருக்கு ஷேர் செய்து விடுங்கள். காரணம் இவ்வளவு நன்மைகள் கொண்ட கிரீன் டீ நாம் ஏன் குடிக்கிறோம் எதற்கு குடிக்கிறோம் என்று தெரியாமலே இருக்கலாம்.
பொதுவாக கிரீன் டீ தாவரவியல் அடிப்படையில் பார்க்கும் பொழுது அது மிகுந்த ஆர்ஜினற்ற சேர்மங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. இதில் polyphenol இருப்பதால் செல் சேதத்தை முற்றிலுமாக தடுக்க உதவுகிறது.
மேலும் இது நம் நினைவாற்றல், மற்றும் மூளைய சுறுசுறுப்பாக்கி மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அண்டை நாள் முழுவதும் நம்மளை உற்சாகத்துடன் இருப்பதற்கு கிரீன் டீ பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் இவை நல்லது.
புற்று நோய்களிலிருந்து நம்மளை காத்துக் கொள்வதற்கும் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அதை அழிக்கும் வல்லமை கொண்டது இந்த கிரீன் டீ. மேலும் இவை புற்றுநோய் செல்களை அழிப்பதற்காகவும் ஆபத்தை குறைப்பதற்கு உதவுகிறதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நரம்பு கடத்தல் பாதிப்பில் இருந்து நோய் அபாயத்தை எதிரி கொண்டு அதை அளிக்கும் திறன் கிரீன் டீயில் உள்ளது. காரணம் இதில் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் மூளையே ஆரோக்கியத்திற்கும் நரம்பு மண்டலத்துக்கும் பயன்படுகிறது.
ஒரு ஆய்வில் கிரீன் டீ குடிப்பவர்களை விட கிரீன் டீ குடிக்காதவர்களின் ஆயுட்காலம் குறைவு என தெரிவிக்கின்றன. அதனால் முடிந்த வரையில் கிரீன் டீ குடிப்பது நல்லது தான் ஆனாலும் அதிலும் ஒரு சில தீமைகள் உள்ளது அதை அறிந்து எடுத்துக் கொள்வது சிறந்த வெளியாகும்.
Also Read More:இது மட்டும் கனவில் வரக்கூடாது ! kanavu palangal in tamil
கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா? weights Loss For Green Tea
இங்கு பலரும் இந்த கிரீன் டீ எடுத்துக் கொள்வது உடல் எடையை குறையும் என்பதற்காக. அப்படி உண்மையிலே கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறைகிறதா அல்லது மற்றொரு எல்லாம் சொல்கின்றன என்பதற்காக இதை நாம் கொடுக்கிறோமோ என்பதை தெரிந்து கொண்டு கிரீன் டீ குடியுங்கள்.
ஆனால் இவை உண்மைதான் கிரீன் டீ குடிப்பது நம் உடல் எடையை குறைப்பதற்கும் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து உடல் எடையை குறைக்கிறது.
- இதை குறைந்தபட்சம் உடல் பயிற்சி செய்த பிறகு குடிப்பது நல்லது.
- அதேபோல் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீ எடுத்துக் கொள்வது உடல் எடையை குறைப்பதற்கு மேலும் உதவும்.
கிரீன் டீ எடுத்துக் கொண்டால் என்ன மாதிரியான தீமைகள் உண்டாகும் தெரியுமா?
எந்த ஒரு விஷயத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் அவை நமக்கு தீமை தான். அந்த வகையில் வழக்கத்தை விட அதிகமாக கிரீன் டீ எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு ஆபத்தான ஒரு தருணத்தை ஏற்படுத்தும்.
வயிற்று வலி: அதிக அளவு கிரீன் டீ எடுத்துக் கொள்வது சில நேரங்களில் வயிற்று சம்பந்தமான வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். அதே போல் சிலருக்கு வாந்தி, தலைச்சுற்று போன்றவையும் ஏற்படுத்தும்.
இரும்பு சத்து: பெரும்பாலும் கிரீன் டீயில் அதிகம் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. இவை தம் உடலுக்கு இரும்பு சத்து செல்வதை உறிஞ்சப்பட்டு இதனால் இரும்பு சத்து இல்லாமல் நம் உடலுக்கு போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
- மேலும் இவை அதிகமாக எடுத்துக் கொள்வது கல்லிருக்கும் பிரச்சினை ஏற்படுத்தும் அழுத்தத்தை கொடுக்கும்.
- கர்ப்பிணி பெண்கள் முடிந்த வரையில் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ எடுத்துக் கொள்வது சிறந்தது அல்ல. இவை டானின்கள் மற்றும் கெட்சீன்கள் கர்ப்ப காலத்தில் நல்லது கிடையாது.
- இவை கால்சியத்தை குறைத்து எலும்புகளில் வலுவின்மைக்கு காரணமாக அமையும்.
இப்படி பல நன்மைகளும் சரி தீமைகளும் தரக்கக்கூடிய இந்த கிரீன் டீ எடுத்துக் கொள்வது உங்களுடைய விருப்பம் மட்டும்தான். அல்லது உங்களுடைய உடலுக்கு ஏற்றார் போல மருத்துவர்கள் ஆலோசனைப்படி இதை எடுத்துக் கொள்வது சிறந்த வழியாகும்.