agathi keerai health benefits in tamil கீரைகள் என்றாலே ஒவ்வொன்றிலும் மகத்தான சக்திகள் உள்ளது. பலவகைப்பட்ட கீரைகளில் இறைச்சிகளுக்கு இணையாக விட்டமின்கள், புரதங்கள், கலோரிகள் இப்படி அடுக்கி கொண்டே போகலாம். அந்த வகையில் அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள் இவை உடலுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் என்ன மாதிரியான நற்பண்புகள் நமக்கு வந்து சேரும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
அகத்திக்கீரை நன்மைகள் agathi keerai
பொதுவாக அகத்திக்கீரை கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும். ஆடுகளுக்கும் பிடித்த உணவாகவும் இது உள்ளது. இந்த வகையான கீரைகள் மரங்களில் இருக்கும். எப்படி முருங்கை மரத் உள்ளதோ அதேபோல் அகத்தி மரத்தில் தான் அகத்திக்கீரை கிடைக்கிறது.
விவசாய நிலங்களில் வரப்பு ஓரத்திலோ, அல்லது வெற்றிலை தோட்டத்தில் அதிகமாக இவை தென்படும். ஒரு கிலோ அகத்திக்கீரை குறைந்தபட்சம் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் அதிக சத்துக்கள் உள்ளது.
அகத்திக் கீரையில் உள்ள சத்துக்கள் agathi keerai vitamins in Tamil
வைட்டமின் ஏசி |
1.4 கொழுப்பு சத்து |
3.1 தாது உப்புக்கள் |
Also Read More :ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க கருஞ்சீரக எண்ணெய் karunjeeragam oil benefits in tamil
அகத்திக்கீரை மருத்துவ குணங்கள் agathi keerai Medical Uses in Tamil
அகத்திக்கீரை சித்த மருத்துவங்களுக்கு கிட்டத்தட்ட 63 வகைகள் சத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவை அகதிகள் மற்றும் அகத்திக் கீரையின் பூக்கள் என இரண்டிலிருந்தும் மிக அதிகமான சக்திகள் கிடைக்கின்றன.
அகத்திக்கீரை சாறு :அகத்திக் கீரையின் சாறை பிழிந்து அடிபட்டு இடத்தில் வைக்கலாம். மேலும் அவை ஏற்படும் பொழுது புண்களை ஆற்றுவதற்கும் மருந்தாக பயன்படுகிறது. மேலும் கீரை சாற்றை உப்பு சேர்த்து குடிக்கும் பொழுது அவை உடலில் உள்ள பித்தத்தை குறைக்கிறது.
இருமல் குறைய: அதேபோல் அதிகமாக இருமல் ஏற்படும்பொழுது அல்லது நாள்பட்ட இருமலையின் நிலையை குறைக்க அகத்திக்கீரை பிழிந்து சாற்றை தேனுடன் சேர்த்து உண்ணும் பொழுது வெறும் ஒரு மாதத்தில் நாள்பட்ட இருமல் குறையும்.
சொரி சிரங்கு: சொறி சிரங்கு, அலர்ஜி போன்ற அதிகமாக இருக்கும் பட்சத்தில் அகத்திக்கீரை மற்றும் அதே அளவு தேங்காய் எடுத்து அரைத்து அதன் சாற்றை சொரி சிரங்கு, தேமல் போன்ற இடங்களில் பற்று போடும் பொழுது அவை கூடிய விரைவில் சரி ஆகும்.
குடிப்பழக்கம் : அதேபோல் அகத்திக்கீரை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் நச்சுக்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற இவை உதவுகிறது.
வயிற்று வலி: அதிகமான வயிற்று வலி இருக்கும் பட்சத்தில் அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்து அதன் சாற்றை பிழிந்து சாப்பிடும் பொழுது உடனடியாக வலி நிவாரணையாக பயன்படும் வயிற்று வலிக்கு.
குடல் புண்: அகத்திக்கீரை சாப்பிடும் பொழுது வாய்க்கு குடல் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டுள்ளது. மேலும் தொடர்களில் இருக்கும் பூச்சிகளையும் வெளியேற்ற பயன்படுகிறது.
அகத்திக்கீரை சாப்பிடும் முறை
சித்த மருத்துவங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த கீரையை பல வகைகள் சாப்பிடலாம். அல்லது கீரைக்கு பதிலாக கீரையின் சாற்றை பிழிந்து அதையும் குடிக்கலாம்.
- இட்லி சட்டியில் இட்டிலி வேக வைப்பது போல் ஆவியில் வேகவைத்து அதன் சாற்றை எடுத்துக் குடிக்கலாம். இப்படியும் சமைத்து சாப்பிடலாம்
- கீரை பொரியல் வெங்காயம், அகத்திக்கீரை, மிளகாய், தேங்காய் போன்றவற்றை பொறியல் முறையில் செய்தும் சாப்பிடலாம்.
- கீரைச் சாற்றை நேரடியாகவோ அல்லது அதில் தேன் கலந்தும் சாப்பிடலாம்.
- கீரையில் கிடைக்கும் பூவையும் சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.