ஆதார் கார்டு இருக்கா இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபர்களுக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயம். ஏனென்றால் இந்தியாவில் பிறந்ததற்கு ஆதார் கார்டு ஒரு முக்கியமான சான்றாக விளங்குகிறது. மேலும் எந்தவிதமான அரசாங்கத்தின் மூலம் பெறக்கூடிய எந்த ஒரு சான்றிதழ்களுக்கும் அல்லது தேவைகளுக்கும் ஆதார் கார்டு முக்கியம்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
ஆதார் அட்டை என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பது ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை 2016 இல் உள்ளது. அதன்படி ஆதார் வைத்திருக்கும் நபர்கள் அவருடைய பெயர் மற்றும் முகவரி பத்து ஆண்டிற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
அதன்படி வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாக ஆதார் அட்டையில் உங்களுடைய புதுப்பித்தல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருந்தால் அதை அவ்வப்பொழுதே பிரித்துக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்பு அம்சம் என்னென்ன krishana jayanthi benefits
ஆதார் அட்டை திருத்த கட்டணம்
அந்த வகையில் ஆதராட்டினை புதுப்பிக்க குறைந்தபட்சம் ஆதார் மையங்களில் 25 முதல் 100 ரூபாய் வரை வசிக்கப்படும். அப்பொழுது நீங்கள் எந்த மாதிரியான பிழைகளை புதுப்பிக்க விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்றார் போல ஏதேனும் சான்றிதர்களை Proof ஆக காண்பிக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு சான்றிதழ்களை ஜெராக்ஸ் மூலம் ஆதரவு மையத்திற்கு கொண்டு சேர்த்து உங்களுடைய பிழையை திருத்திக் கொள்ள வேண்டும்.
- பள்ளிச் சான்றிதழ்
- ரேஷன் கார்டு
- பான் கார்டு
- டிரைவிங் லைசென்ஸ்
- வாக்காளர் அடையாள அட்டை
- மின் கட்டண ரசீது அல்லது எரிவாய் ரசீது
- பாஸ்போர்ட்
- திருமணச் சான்றிதழ்
போன்றவற்றை கொடுத்து உங்களுடைய முகவரியில் ஏதேனும் பிழை இருந்தாலும் பிரித்துக் கொள்ள முடியும்.